26th of July 2015
சென்னை:அது என்னவோ தெரியல, என்ன மாயமோ புரியல. த்ரிஷாவை குறிவைத்து பறக்கும் செய்திகள் சமீபகாலமாக அதிகமாகிவிட்டது. ராணாவின் காதல் தொடங்கி வருண்மணியனுடன் நிச்சயிக்கப்பட்ட கல்யாணம் நின்றுபோனது வரை த்ரிஷா எடுத்து வைக்கும் எட்டெல்லாம் ஏழரை ஆகிவிடுகிறது. நொந்த மனதுக்கு மருந்தாக ஆன்மீக பாதையை நோக்கி த்ரிஷா அபோட்டர்ன் செய்ததாக சில தினங்களுக்கு முன் நமது இணையதளத்திலேயே செய்தி போட்டிருந்தோம்.
ஹீரோக்களில் எம்.ஜி.ஆர்.,என்.டி.ஆர்., விஜயகாந்த் ,சரத்குமார் என தொடங்கி பெரிய பட்டியலே நீள்கிறது. நடிகைகளில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி ஜெயப்பிரதா, விஜயசாந்தி, ரோஜா, விந்தியா வரைக்கும் அரசியல் டிராக்கில் தடதடக்கிறார்கள். இந்த பட்டியலில் புதிய வரவாக த்ரிஷா வருவதில் ஆச்சரியமில்லை என்று அவர் அ.தி.மு.க.வில் சேரப்போவதாக வெளியான செய்தியை நம்பினர்.

ஆனால் அவர் அ.தி.மு.க.வில் சேரப்போகிறார் என்று திடீரென நேற்று செய்திகளில் அடிபட்டது த்ரிஷா பெயர். நட்சத்திரங்கள் அரசியலில் குதிப்பது ஒன்றும் புதிதில்லை.
ஹீரோக்களில் எம்.ஜி.ஆர்.,என்.டி.ஆர்., விஜயகாந்த் ,சரத்குமார் என தொடங்கி பெரிய பட்டியலே நீள்கிறது. நடிகைகளில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி ஜெயப்பிரதா, விஜயசாந்தி, ரோஜா, விந்தியா வரைக்கும் அரசியல் டிராக்கில் தடதடக்கிறார்கள். இந்த பட்டியலில் புதிய வரவாக த்ரிஷா வருவதில் ஆச்சரியமில்லை என்று அவர் அ.தி.மு.க.வில் சேரப்போவதாக வெளியான செய்தியை நம்பினர்.
ஆனால் த்ரிஷாவோ இந்த செய்தியை மறுத்திருக்கிறார். “நான் எந்த கட்சியிலும் சேரவில்லை. இப்போது மட்டுமில்லை எப்போதும் எனக்கு அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கம் த்ரிஷா இல்லை என்று மறுத்தாலும் அவர் அ.தி.மு.க.வில் சேரப்போகிறார் என்ற செய்தி வெளியாகும் நேரம் பார்த்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவுடன் இருக்கும் புகைப்படத்தை அப்டேட் செய்தது ஏன்? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Comments
Post a Comment