ஒரே நாளில் ரீலிசாகும் 'தாத்தா, அப்பா, மகன்' படங்கள்!!!

23rd of July 2015
சென்னை:நடிகர் சிவாஜி கணேசனின் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை நடிகராக விக்ரம் பிரபு வெற்றி பெற்றுவிட்டார். 'கும்கி' படத்தின் மூலம் அறிமுகமான விக்ரம் பிரபு தொடர்ந்து பல படங்களின் மூலம் வெற்றிக்களைக் கொடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி இளம் ஹீரோக்களின் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார்.
இதற்கிடையில், தனது தாத்தா சிவாஜி, அப்பா பிரபு ஆகியோருடன் இவர் சேர்ந்து நடிக்க வில்லை என்றாலும், இவர்களுடன் போட்டி போட தயாராகி விட்டார்.

ஆம், சிவாஜி கணேசன் அண்டிப்பில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற 'வீர பாண்டிய கட்டபொம்மன்' படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வரும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது. அதே நாளில் ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி ஆகியோரது நடிப்பில் இரிவாகியுள்ள 'சகலகலா வல்லவன் - அப்பாடக்கர்' படம் வெளியாகிறது. இப்படத்தில் பிரபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதேபோல விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள 'இது என்ன மாயம்' படமும் அதே 31ஆம் தேதி வெளியாகிறது. 
ஆக, தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது, சினிமா ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments