20th of July 2015
சென்னை:பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஒரு படம் தயாரிக்கிறது என்றால் கிட்டத்தட்ட அது ஹிட் என்றே அடித்து சொல்லலாம். உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், உனக்காக எல்லாம் உனக்காக, அன்பே சிவம் ஆகிய பல படங்கள் இவர்கள் தயாரிப்பில் ஹிட்டானவை. ஆனால் கடந்த பத்து வருடங்களில் தாஸ், புதுப்பேட்டை, ஆட்ட நாயகன் என அவர்கள் தயாரித்த படங்கள் தோல்வியை சந்திக்க சிறிதுகாலம் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தார்கள்.

இப்போது மீண்டும் ஜெயம் ரவியை வைத்து சுராஜ் டைரக்சனில் ‘அப்பாடக்கர்’ என்கிற படத்தை தயாரித்துள்ளார்கள். வரிவிலக்கு உள்ளிட்ட விஷயங்களுக்காக தற்போது கமல் முன்பு நடித்த ‘சகலகலா வல்லவன்’ பட டைட்டிலை ஏ.வி.எம்மிடமிருந்து கேட்டது வாங்கி தங்களது படத்திற்கு வைத்துவிட்டார்கள்.
சுராஜ் ஒரு கமர்ஷியல் டைரக்டர்.. ஜெயம் ரவி, ஹீரோயின்கள் த்ரிஷா, அஞ்சலி.. காமெடிக்கு விவேக், சூரி என பக்காவான டீமுடன் களமிறங்கியுள்ளதால் இந்தமுறை நிச்சயம் வெற்றியை ருசித்துவிடலாம் என்கிற நம்பிக்கையில் தெம்புடன் உள்ளது லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். இன்று இந்தப்படத்தின் இசை வெளியீடு நடைபெறுகிறது. வரும் ஜூலை-31ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாக இருக்கிறது.
Comments
Post a Comment