கமலுடன் போட்டி போட தயாராகி வரும் சூர்யா, அஜித்!!!

8th of July 2015
சென்னை:கமல் நடிப்பில் வெளியாகியுள்ள 'பாபநாசம்' படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று, வியாபர ரீதியாவும் பெரும் சாதனைப் படித்து ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்திற்கு பிறகு கமலின் அடுத்தப்படமாக 'தூங்காவனம்' தீபாவளி பண்டிகையன்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், கமலின் 'தூங்காவனம்' படத்தோடு சூர்யா நடிப்பில் உருவாக்கு வரும் '24', அஜித்தின் நடிப்பில் உருவாக்கி வரும் பெயரிடாதப்படம் ஆகியவையும் தீபாவளியன்று வெளியிட முடிவு செய்யபப்ட்டுள்ளதாம்.
தற்போதைய தமிழ் சினிமா சுழலில், முன்னணி நடிகர் ஒருவரது படம் வெளியானால், சிறிய படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. ஆனால், தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த மூன்று முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் எப்படி திரையரங்கத்தை பகிர்ந்துக்கொடுக்கப் போகிறார்களோ.

Comments