ஆர்யாவை சந்தோஷப்படுத்திய டி.இமான்!!!

23rd of July 2015
சென்னை:ஆர்யா , சந்தானம் தமன்னா, முக்தா பானு , வித்யுலேகா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’(வி.எஸ்.ஒ.பி). ஆர்யாவின் 'தி ஷோ பீப்பல்’ தயாரிக்கும் இத்திரைப்படத்தின் ‘லக்காமாட்டிகிச்சு’ என்ற ஒற்றை பாடல் நேற்று  வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் டி.இமானின் இசையில் இந்தப் பாடல் இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

இந்த பாட்டின் ஹிட்டால் படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவும் ஆனா, ஆர்யா ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறாராம்.
இப்பாடல் உருவாது குறித்து இசையமைப்பாளர் இமான் கூறுகையில், "வழக்கமா ரெண்டு பசங்க குடிச்சா பொண்ணுங்கள திட்டி பாடுற பாட்டு கிடையாது. ஒரு பையன் தான் காதலியைப் பற்றி ரசிச்சு பாடுற ஒரு பாட்டு இது. டோலக் கானா ஜெகன், செந்தில் தாஸ் மற்றும் பழனியம்மாள் என புது பாடகர்களை அறிமுக படுத்தியுள்ளோம்.

எழுதும்போதே ஈசியா எல்லாருக்கும் புரியுற மாதிரி, பிடிக்குற மாதிரி ஒரு பாட்டா இருக்கணும்னு ரோகேஷ் எழுதினதுதான் ‘லக்காமாட்டிகிச்சு’. குறிப்பா பெண்களுக்கு  இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்.

ராஜேஷ் சார் இந்த மெட்டும், வரிகளும் பொறுமையா எல்லாருக்கும் புரியுற மாதிரி இருக்கனும்னு கேட்டாரு அதுதான் இப்ப கேக்குற லக்காமாட்டிகிச்சு பாடல்” எனக் கூறினார்.

Comments