22nd of July 2015
சென்னை:பிரபல திரைப்பட தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர், உடல் நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார்.
கடந்த ஒருமாத காலமாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை சுமார்
11 மணியளவில் காலமானார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இப்ராஹிம் ராவுத்தர், நடிகரும் தேமுதிக
தலைவருமான விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் ஆவார். விஜயகாந்தும், இப்ராஹின்
ராவுத்தரும் சினிமாவுக்கு ஒன்றாக வந்தவர்கள்.
விஜயகாந்த் நடிப்பில் மாபெரும் வெற்றிப்பெற்ற 'கேப்டன் பிரபாகரன்',
'பூந்தோட்டக் காவல்காரன்', 'புலன் விசாரணை' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை
இப்ராஹிம் ராவுத்தர் தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'புரியாத ஆனந்தம்
புதிதாக ஆரம்பம்' படம் தான் இப்ராஹிம் ராவுத்தர் இறுதியாக தயாரித்த படம்.
அவரது உடல் சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள ’ராவுத்தர்
பிலிம்ஸ்’ அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என இப்ராகிம்
ராவுத்தரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment