28th of July 2015
சென்னை:சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘சகலகலா வல்லவன்’ படம் வரும் ஜூலை-31ஆம் தேதி ரிலீஸாகிறது. இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆச்சர்யமாக படத்தின் இரண்டு கதாநாயகிகளான திர்ஷாவும் அஞ்சலியும் இதில் கலந்துகொண்டனர்..
படத்தின் நகைச்சுவை நாயகர்கள் விவேக், சூரி, நான் கடவுள் ராஜேந்திரன் மூவருமே ஆப்சென்ட். படத்தில் மற்றவர்களின் கதாபாத்திரம் அனைத்தும் சேர்த்து 50 சதவீதம் என்றால் சூரியின் பங்கு மட்டும் தனியாக 50 சதவீதமாம். அந்த அளவுக்கு உள்ளத்தை அள்ளித்தா கவுண்டமணி போல ஜெயம் ரவிக்கு இணையாக சூரிக்கு பவர்புல் வேடமாம்இதில் காமெடி என்னவென்றால் படத்தில் த்ரிஷா, அஞ்சலி இருவரையுமே காதலிப்பாராம்..
ஒருத்தர் இல்லாட்டி இன்னொருத்தரை கட்டிக்கலாம் என்பதுதான் அவரது பாலிசியாம். நீங்க லவ் பண்ணுனா பண்ணுங்க.. அது உங்க விருப்பம்.. ஆனா நான் உங்களை லவ் பண்ணுவேன் அது என் உரிமை என சொல்லும் சூரியின் காமெடி எபிசோட் படத்தின் ஹைலைட்ட்டாக இருக்குமாம் படிக்காதவன், மாப்பிள்ளை என சுராஜ் படங்களில் அவரது ஆஸ்தான காமெடியனாக நடித்துவரும் விவேக்கும் இடைவேளைக்குப்பின் அரைமணி நேரம் என்ட்ரி கொடுக்கிறாராம்.. இந்த்ப்படத்தில் முதன்முதலாக விவேக் மொட்டை அடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் போதாதென்று நான் கடவுள் ராஜேந்திரன் வேறு போலீஸ் கெட்டப்பில் மிரட்டுகிறார். ஆக மிகப்பெரிய காமெடி ட்ரீட் இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.
Comments
Post a Comment