28th of July 2015
சென்னை:இதுவரை தான் நடித்த படங்களில் சீரியஸ் முகம் காட்டிவந்த நரேன், “கத்துக்குட்டி” படத்தில் காமெடியில் தைரியமாக இறங்கியுள்ளாராம். படம் பார்ப்பவர்களுக்கு நரேன் இப்படி கூட காமெடி பண்ணுவாரா என்கிற திகைப்புத்தான் ஏற்படுமாம். சூரியின் பெர்பாமன்ஸ் அதுக்கும் மேல என்றும் சொல்லும் விதமாக இருக்கிறதாம்.
படத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த குக்கிராமத்துப் பெண்ணாக நடிக்கும் ஸ்ருஷ்டி டாங்கே, தஞ்சை மாவட்ட வட்டார வழக்கை அப்படியே பேசி அசத்தி இருக்கிறார். படத்தில் நரேனுடன் ஸ்ருஷ்டி நேருக்கு நேர் மோதும் சண்டைக் காட்சியும் படமாக்கப்பட்டுள்ளதாம். இதில், கிராமத்துப் பெண்கள் தலை முடியை அள்ளி முடிந்துகொண்டு சண்டை போடுவதைப்போல் அப்படியே ஆக்ரோஷம் காட்டி ஸ்ருஷ்டி சண்டை போட, யூனிட்டே கைதட்டிப் பாராட்டி இருக்கிறது.
இந்தப்படத்தை இயக்கும் இரா.சரவணன் யாரிடமும் உதவி இயக்குனராக வேலை பார்க்காதவராம். எந்த அனுபவமும் இல்லாதவனைத்தான் கத்துக்குட்டி என்று சொல்வார்கள். அப்படி தஞ்சை மண்ணில் சுத்திக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் தன் தந்தையின் கனவை நிறைவேற்றுவது தான் படத்தின் கதை. படத்தை ஆகஸ்ட்ட்டில் ரிலீஸ் செய்ய முடிவு செ ய்திருக்கிறார்களாம்.
Comments
Post a Comment