அப்பாவை போல் நான் ‘ஃபிட்’ கிடையாது ஸ்ருதி ஹாசன்

30th of July 2015
சென்னை:அஜீத்துடன் புதிய படத்தில் வக்கீல் வேடத்தில் நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன். முன்னதாக இவர் இந்தியில் ஜான் ஆப்ரகாமுடன் நடித்து வந்த ‘வெல்கம் பேக்’ படப்பிடிப்பு முடிந்தது. இது பற்றி ஸ்ருதி கூறியது: எனது தந்தை கமல் படப்பிடிப்பில் இருக்கும்போது தனது கதாபாத்திரம் பற்றி மட்டுமல்லாமல் உடன் நடிப்பவர்களின் கதாபாத்திரம் மற்றும் ஒட்டுமொத்த பட குழு பற்றியும் தனது சிந்தனையில் நிறுத்தி இருப்பார்.

வரைப்போலவே ஜான் ஆப்ரகாமும் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பார். உடன் நடிப்பவர்களுடன் ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொள்வதுடன் அந்த வேடத்துக்கு தகுதியாக தன்னை வைத்திருப்பார். இந்த வயதில்கூட எனது தந்தை தன்னை எல்லா கதாபாத்திரத்துக்கும் ஏற்ப தகுதியாக வைத்துக்கொள்கிறார். அதற்கு காரணம் அவரிடம் உள்ள உண்மையான ஈடுபாடும் ஒழுக்கமும்தான்.படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் பாசிடிவ் மூடுடன் இருப்பதோடு
 
கதாபாத்திரத்துக்கும் தகுதியானவராக இருக்க வேண்டியது முக்கியம். ஆனால் என் அப்பாவை போலவும் சரி, ஜான் ஆப்ரகாமை போலவும் சரி நான் ஃபிட் ஆக இருந்தது கிடையாது. எந்நேரமும் சாப்பிட்டக்கொண்டே இருக்கிறேன். இவ்வாறு ஸ்ருதி ஹாசன் கூறினார்.

Comments