புலி ரகசியங்கள் - உஷாரான சிம்புதேவன் - வெளிவிடாத ருசிகர தகவல்!!!

11th of July 2015
சென்னை:சிம்புதேவன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் ”புலி” படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
 
விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதி, சுதீப், பிரபு உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படம் புராண காலம், சமகாலம் என இரண்டு காலக்கட்டங்களில் கதை நிகழ்கிறது. இவற்றில் புராணகாலத்தில்தான் புலி படத்தின் பெரும்பாலான காட்சிகள் நடைபெறுவதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், புராண காலத்து படம் என்றால் யாராவது வேண்டுமென்றே எதையாவது சொல்லி கோர்ட்டுக்குப் போய்விடக்கூடாது என்பதற்காக இப்போதே உஷாராகப் பேச ஆரம்பித்துவிட்டாராம் சிம்புதேவன். யார் கேட்டாலும் இது வரலாற்றுப்படமில்லை.. வரலாற்றுப் புனைவு படம் என்று சொல்லி வருகிறாராம் உஷார் பார்டி சிம்புதேவன்.

Comments