22nd of July 2015
சென்னைமதுரையில் 'பாகுபலி' படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது, அத்திரைப்படம்
ஓடும் திரையரங்கம் ஒன்றில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பெரும்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கு முன்னணி இயக்குனர் ராஜமவுலி, இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்
'பாகுபலி'. இப்படம் தெலுங்கு மட்டும் இன்றி தமிழ், மலையாளம் மற்றும் இந்தி
ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ளது.
குறுகிய காலத்தில் அதிக வசூல் ஈட்டிய முதல் இந்திய திரைப்படம், என்ற
சாதனையை புரிந்து, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள 'புரட்சி புலிகள்
இயக்கம்' என்ற அமைப்பினர், 'பாகுபலி' திரையிடப்பட்டுள்ள, மதுரை
திரையரங்கம் ஒன்றில் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளது. பாகுபலி படத்தில்
தலித் சமூகத்தை இழிவுப்படுத்தியிருப்பதாக கூறி, இந்த தாக்குதலை
நடத்தியுள்ளனர்.
மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள, தமிழ் ஜெயா என்ற திரையரங்கில் இந்த
பெட்ரோல் குண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில்
ஈடுபட்டவர்கள், மேலும், "தமிழக அரசே தலித் சமூகத்தை இழிவுகாப் பேசும்
பாகுபலி படத்தை தடை செய்" என்ற வாசகம் கொண்ட, துண்டு பிரசுரத்தையும் வீசிச்
சென்றனர்.
இந்த சம்பவத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.
Comments
Post a Comment