- Get link
- X
- Other Apps
16th of July 2015
சென்னை:வேலையில்லா பட்டதாரி, அனேகன் ஹிந்தியில் ஷமித்தாய் என தொடர் வெற்றிக்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள படம் மாரி. காதலில் சொதப்புவது எப்படி மற்றும் வாயை மூடி பேசவும் படங்களின் இயக்குனர் பாலாஜி மோகன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

தனுஷ்-காஜல் அகர்வால் முதன்முறையாக இணையும்
இப்படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்னேஷ் சிவன்,ரோகேஷ்
ஆகியோருடன் தனுஷும் பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்திற்கு இசையமைத்துள்ள
அனிருத் ஒரு பாடலில் தனுஷுடன் இணைந்து நடனமாடியுள்ளார்.
பின்னனி பாடகர் விஜய் ஜேசுதாஸ் முதன்முறையாக போலீஸ்
அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ளார். கொச்சியில் உள்ள Digital Bricks
என்ற நிறுவனம் கிராபிக்ஸ் பணிகளை செய்துள்ளது. இப்படத்தின் சூட்டிங் கடந்த
நவம்பர் மாதம் தொடங்கி தொடர்ந்து 57 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது.
இப்படத்தின் டீரைலர் யூட்யூபில் வெளியாகி 3 மில்லியன் மக்கள் பார்த்து அமோக வரவேற்பை பெற்றது. பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தனிக்கைக்குழு இப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் வழங்கியது.
இப்படத்தை மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம்- ஆர்.சரத்குமார், ராதிகா சரத்குமார்
லிஸ்டின் ஸ்டீபன் மற்றும் தனுஷின் வுண்டர்பார் பில்ம்ஸ் இணைந்து
தயாரித்துள்ளது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment