25th of July 2015
சென்னை:எதிர்காலத்தில் குறும்படங்கள் ஒரு தவிர்க்கமுடியாத சக்தியாக மாறும் என்று கணித்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், குறும்பட இயக்குனர்களை ஊக்கப்படுத்த ‘ஸ்டோன் பெஞ்ச்’ என்கிற களத்தை உருவாக்கியது தெரியும் தானே. இப்போது அதே ரூட்டில் ஐஸ்வர்யா தனுஷும் குறும்பட இயக்குனர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுக்காகவே ஒரு சேனல் தொடங்கியுள்ளார்.

சேனல் என்றதும் டிவி சேனல் என நினைத்துவிட வேண்டாம். ‘டென் என்டர்டெயின்மென்ட்’ என்கிற யூ டியூப் சேனல் தான். இதன் வழியாக தென்னிந்திய மொழிகளில் உருவாகும் குறும்படங்கள் அனைத்தும் பதிவேற்றப்பட்டு வெளியிடப்படும்.
இந்தியாவில் இப்படி ஒரு யூடியூப் சேனலை ஆரம்பிப்பது இதுதான் முதல் தடவை. தங்களது வுண்டர் பார் பிலிம்ஸின் ஒரு அங்கமாகத்தான் இதை தொடங்கியுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ். குறும்பட இயக்குனர்கள் தங்களது படைப்பினை submit@tenentertainment.com என்கிற மின் அஞ்சலுக்கு அனுப்பலாம்
Comments
Post a Comment