சென்னை:சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'வாலு', படம் அனைத்து பணிகளும்
முடிவடைந்தும் வெளியாகாமல் உள்ளது. இதையடுத்து, சிம்புவின் அப்பாவும்
நடிகருமான டி.ராஜேந்தர், தனது சொந்த நிறுவனத்தின் மூலம் வாலு படத்தை
வெளியிட முடிவு செய்து அதற்கான வேளைகளில் இறங்கினார்.
பிறகு படத்தை தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கிய அவர், படத்தை கடந்த 17ஆம்
தேதி ரீலீஸ் செய்வதாக அறிவித்தார். இந்த நிலையில் மேஜிம் ரேஸ் என்ற
நிறுவனம் சார்பில் வாலு படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், சென்னை
உயர் நீதிமன்றம் வாலு படத்தின் ரிலீஸுக்கு தடை விதித்தது.
இதையடுத்து வாலு படத்திற்கு மீண்டும் சிக்கல் எழுந்து படம் வெளியாகாமல் போனது.
இந்த நிலையில், நடிகர் விஜய் டி.ராஜேந்தருக்கு உதவி செய்யும் விதமாக
வாலு படத்தை வெளியிட உதவிகள் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர்
விஜய், தனக்கு தெரிந்த விநியோகஸ்தர்களிடம் பேசி வாலு படத்தை வெளியிட
முயற்சிகள் மேற்கொண்டுள்ளாராம்.
அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு மீது விஜய்க்கு என்ன இந்த தீடீர் பற்று
என்று விசாரித்தால், விஜய்க்கு டி.ராஜேந்தரை ரொம்ப பிடிக்குமாம், அதேபோல,
டி.ராஜேந்தருக்கும் விஜயை பிடிக்குமாம், எனவே, டி.ஆரின் படத்திற்கு
பிரச்சினை ஏற்பட்டது என்பதை கேள்விப்பட்டவுடன் விஜய், அதை தாங்கிக்
கொள்ளமுடியாமல் உதவ முன் வந்துள்ளதாக விஜய் தரப்பு தெரிவித்துள்ளது.
படத்திற்கு எதிரான பிரச்சனை தீர்ந்ததாக கூறப்பட்டாலும், இன்னும் வெளியிட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.
Comments
Post a Comment