வாலு படத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை: சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி!!!

8th of July 2015
சென்னை:வாலு படம் ஜுலை 17ம் தேதி வரும் என ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்தனர், ஆனால், இன்று நீதிமன்றத்தில் இப்படத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளனர்.

இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநில வெளியீட்டு உரிமையை எங்களது நிறுவனத்துக்கு ரூ.10 கோடிக்கு 2013-ல் ஒப்பந்தம் செய்தார்கள்.

அதனை மீறி தற்போது வேறு ஒரு நபர் மூலமாக இப்படத்தை வெளியிட முயல்கிறார்கள். எனவே என்னைத் தவிர வேறு நபர் மூலமாக 'வாலு' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று மேஜிக் ரேஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தெரிவிக்கப்பட்டது.
 
இதை தொடர்ந்து இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி படத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளார், மேலும், படம் சொன்ன தேதியில் இந்த முறை வருவதும் சந்தேகம் தானாம்.

Comments