மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் படத்தில் இணையும் துல்கர்!!!

19th of July 2015
சென்னை: நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் துல்கர் சல்மான் (கோப்பு படம்)
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் படத்தில் அவருடன் இணைந்து நடிக்க துல்கர் சல்மான் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
 
துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்க, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் 'ஓ காதல் கண்மணி'. மக்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் இப்படத்துக்கு வரவேற்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தின் பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் மணிரத்னம். தனது படத்தின் நடிகர்கள், படம் குறித்த மற்ற ஆகியவற்றை ரகசியமாக வைத்திருப்பார் மணிரத்னம்.
 
செப்டம்பரில் துவங்க இருக்கும் தனது அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க கார்த்தியை ஒப்பந்தம் செய்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து 'ஓ காதல் கண்மணி' பட நாயகனான துல்கர் சல்மானையும் முக்கிய வேடத்தில் நடிக்க தற்போது ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
 
நாயகிகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாதத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

Comments