நேரடியாகவே தெலுங்கு படம் ஒன்றில் ஹீரோவாகிறார் சூர்யா!!!

16th of July 2015
சென்னை:சூர்யாவின் பல திரைப்படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு டோலிவுட்டில் சூர்யாவிற்கு நல்ல வரவேற்பு உண்டு. நேரடியாகவே தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொள்ள நேரம் வந்துவிட்டது. , பிரபல தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அல்ஜுன் நடித்த படம் சன் ஆஃப் சத்தியமூர்த்தி சமீபத்தில் வெளிவந்தது. அடுத்த படம் சூர்யாவுடன் என முடிவானதும் கதை விவாதத்தில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாரிக்கப்படும் இந்தப் படம் அடுத்த வருட இறுதிக்குள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

24, சிங்கம் 3 மற்றும் சதுரங்க வேட்டை இயக்குநரின் பெயரிடப்படாத படம் என மூன்று படத்தில் படுபிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சூர்யா இந்தப் படங்களை முடித்துவிட்டுத்தான் தெலுங்குப் படத்தில் நடிப்பார் என்கிறது சூர்யா வட்டாரம். தவிர மனம் திரைப்படத்தை இயக்கிய விக்ரம் குமாரின் திரில்லர் திரைப்படமான 24 முடியும் தருவாயில் உள்ளது. அதன் பின் சிங்கம் பார்ட் 3 செப்டம்பர் மாதம் திரைக்கு வரும். இந்த மூன்று படங்களை முடித்தவுடன் திரிவிக்ரம் இயக்கும் இந்தப்புதிய தெலுங்குத் திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருட பாதியில் தொடங்கும்.

Comments