ஷூட்டிங் ஸ்பாட்டில் திரிஷா - ஹன்சிகா திடீர் மோதல்!!!

29th of July 2015
சென்னை:அரண்மனை 2 படத்தில் திரிஷாவுடன் ஹன்சிகா நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பாகத்தில் ஆண்ட்ரியா, லட்சுமி ராய் என மேலும் 2 ஹீரோயின்களுடன் நடித்தாலும் ஹன்சிகாவுக்கே முக்கியத்துவம் இருந்தது. ஷூட்டிங் செட்டிலும் அவருக்கு தனி மரியாதை தரப்பட்டது. இதனால் குஷியாக இருந்தார் ஹன்சிகா.

ஆனால் பார்ட் 2வில் சீனியர் ஹீரோயின் திரிஷா வந்துவிட்டதால் அவருக்கு முக்கியத்துவம் தரப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் ஹன்சிகா அப்செட்டில் இருக்கிறாராம். இந்நிலையில் படத்தில் தனக்கே காட்சிகளும் பாடல்களும் அதிகம் இருக்க வேண்டும் என இருவருமே டைரக்டரை நச்சரிப்பதாக கூறப்படுகிறது.
 
ஷூட்டிங் ஸ்பாட்டில் இருவரும் எதிரும் புதிருமாக இருக்கிறார்களாம். பேசிக்கொள்வதில்லையாம். நண்பர்களிடம் இப்படத்தை பற்றி பேசும்போது, இதில் நான்தான் மெயின் ஹீரோயின் என இருவருமே சொல்லிக் கொள்கிறார்களாம். ‘ஒன்றுக்கு மேற்பட்ட ஹீரோயின்கள் சேர்ந்து நடித்தாலே இதுதான் பிரச்னை. எல்லா மொழி பட ஷூட்டிங்கிலும் இந்த ஈகோ மோதல் நடக்கிறது. படம் முடியும் வரை பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான்’ என்கிறது சினிமா வட்டாரம்.

Comments