பாங்காக்கில் மனிஷா கொய்ராலாவுடன் டூயட் பாடிய ஷாம்!!!

25th of July 2015
சென்னை:அரர்ஜுன், ஷான், மனிஷா கொய்ராலா ஆகியோரது நடிப்பில் உருவாக்கி வரும் படம் 'ஒரு மெல்லிய கோடு'. 'குப்பி', 'காவலர் குடியிருப்பு', 'வணயுத்தம்' ஆகியப் படங்களை இயக்கிய எ.எம்.ஆர்.ரமேஷ் இயக்குகிறார்.

இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு சேது ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ராதிகா, விட்டால் ஆகியோர் நடனம் அமைக்க, ஆனதன் கலை துறையை கவனிக்கிறார்.கே.வி.கிருஷ்ணா ரெட்டி படத்தொகுப்பு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் வேலைகளும் முடிவடைந்து விட்டது. செப்டம்பர் மாதம்  வெளியாக உள்ள இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றில் ஷாமும், மனிஷா கொய்ராலாவும் பாங்காக்கில் டூயட் பாடியுள்ளார்கள். இந்த பாடல் இளைஞர்களுக்கு பிடித்த விதத்தில் இயக்குனர் படமாக்கியுள்ளாராம்.

Comments