காமெடி ஹீரோவாக வெற்றி பெற்ற சிவகார்த்திகேயன்: கமல் வழியில்!!!

12th of July 2015
சென்னை:காமெடி ஹீரோவாக வெற்றி பெற்ற சிவகார்த்திகேயன், 'காக்கி சட்டை' படத்தின் மூலம் ஆக்ஷனுக்கு மாறினார். இதையடுத்து மேலும் பல புது விதமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள சிவகார்த்திகேயன் தனது புது படம் ஒன்றில், பலவிதமான கெட்டப்புகளில் நடிக்க இருக்கிறார்.

புதுமுக இயக்குனர் பாகராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் தான் இந்த கெட்டப் அவதாரம். இப்படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூங்குட்டி, 'ஐ' படத்தில் பணியாற்றிய மேக்கப் கலைஞர் ஷான் புட் ஆகியோர் பணியாற்றுகிறார்கள். சிவகார்த்திகேயனின் நண்பரான ராஜா எனபவர் தயாரிக்கும் இப்படம் பெரும் போருட்ச்செளவில் உருவாகிறது.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில் சிவகார்த்திகேயன், 3 கெட்டப்புகளில் நடிக்கிறாராம். அதில் ஒன்று பெண் வேடமாம். அவ்வை சண்முகி படத்தில் கமல்ஹாசன் நடித்தது போன்று, அச்சு அசலாக பெண்ணாகவே இந்த கெட்டப்பில் சிவாகார்த்திகேயன் அசத்தப்பொகிறாராம். மேலும், முதியவர் கெட்டப் ஒன்றும் போடுகிறாராம்.

இதன் மூலம், தொடர்ந்து காமெடியை மட்டுமே நம்பியிருந்தால், கோடம்பாக்கத்தில் வண்டி ஓட்ட முடியாது என்பதை புரிந்துக்கொண்ட சிவகார்த்திகேயன், தற்பொது கமல், விக்ரம், சூர்யா போன்ற நடிகர்களின் வரிசையில் பலவிதமான கெட்டப்புகளை போடும் நடிகராக உருவெடுத்துள்ளார்.

Comments