29th of July 2015
சென்னை:முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதிச் சடங்கையொட்டி, நாளை (ஜூலை
30) தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்களில் 2 காட்சிகள் ரத்து
செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே பேரிழப்பு. அவருடைய உடல் அடக்கம் நடைபெறுவதையொட்டி, நாளை (வியாழக்கிழமை) காலை காட்சியும், பகல் காட்சியும் ரத்து செய்ய முடிவு செய்திருக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

Comments
Post a Comment