27th of July 2015
சென்னை:தமிழில் “ஜெயம், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி, வேலாயுதம்” என தொடர்ச்சியாக குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியாக ஆறு படங்களை இயக்கியவர் ராஜா.
இப்போது மோகன் ராஜாவாக ‘தனி ஒருவன்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். தம்பி ஜெயம் ரவியுடன் இணைந்து பணியாற்றும் ஆறாவது படம். ஆறாத சினத்துடன் இந்தப் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படம் பற்றிக் கேட்டால் கொஞ்சம் சூடாகவே பேசுகிறார்.
வேலாயுதம்’ படத்தின் முடிவில் உனக்காகப் போராட யாரும் தேவையில்லை, நீயே களத்தில் இறங்கு என்று சொல்லியிருந்தோம். இந்தப் படத்தில் உன் எதிரி உன்னைத் தேடி வந்து மோதும் வரை காத்திருக்காமல் அவனைத் தேடி நீயே சென்று அவனை எதிர் கொள் என்று சொல்லியிருக்கிறேன்.
ஒரு சவாலான கதையை இந்தப் படத்துக்காக எடுத்துக்கிட்டேன். அதுக்காக நிறைய ஹோம் வொர்க் பண்ண வேண்டியிருந்தது. என்னுடைய முந்தைய படங்கள் ‘அகம்’ பற்றி அதாவது குடும்பம் பற்றி இருந்தது. இந்தப் படம் ‘புறம்’ பற்றிய படம், அதாவது சமுதாயத்தைப் பற்றிய படம்.
நீ சமுதாயத்துக்கு என்ன செஞ்சிருக்க, சமுதாயத்துல என்னவா இருக்கங்கற கேள்விய இந்தப் படம் எழுப்பும். இந்தப் படத்துக்காக ரொம்பவே ஆராய்ச்சி பண்ணியிருக்கேன்.
என் கிட்ட கதை கூட கேக்காம நான் சொல்றத செய்யற ஹீரோவா என் தம்பி ரவி இருக்கிறது எனக்கு சௌகரியம். எல்லாருக்கும் கதை சொல்லு, எனக்கு மட்டும் சொல்ல மாட்டியான்னு அவன் சண்டை போடுவான். நயன்தாரா ஐபிஎஸ் படிச்சிட்டு டிரையினங்கை தொடர முடியாத ஒரு பெண்ணா நடிச்சிருக்காங்க. அரவிந்த்சாமி
எதையும் சொல்லு, ஆனால், அதை ஏத்துக்கற முறையில ஸ்வீட் கோட்டடா சொல்லுன்னு எங்க அப்பா சொல்வாரு, அவர்தான் எனக்கு குரு. அதை என்னுடைய ஒவ்வொரு படத்துலயும் ஃபாலோ பண்ணியிருக்கேன்.
இந்தப் படத்துல என்ன புதுசுன்னு கேட்டீங்கன்னா, எல்லா படமுமே நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் நடக்கிற விஷயமாதான் இருக்கும், அதுல இந்தப் படம் புதுசா இருக்கும்.
நல்லவன் ஒரு பாதையில போய்க்கிட்டிருக்கான், கெட்டவன் அவனை எதிர் கொண்டு ஜெயிக்கிறான். இதுதான் ஜெனரலா ஒரு ஆக்ஷன் படத்தோட ஃபார்முலா. எனக்கு என்னன்னா, அது ஏன் நல்லவன் கெட்டவன் வர்ற வரைக்கும் காத்துக்கிட்டிருக்கிறது. என் எதிரி யாருன்னு நானே தேடிப் போறேன்னு ஹீரோ தேடிப் போறதுதான் படத்தோட கதை. உன் எதிரி யாருன்னு சொல்லு, நான் உன்னைப் பத்திச் சொல்றன்னு டீசர்ல கூட டயலாக் வச்சிருக்கேன்.
ஒரு நல்ல படம் பண்ணியிருக்கிறேன்கற திருப்தி எனக்கு ஏற்பட்டிருக்கு. இந்த ‘தனி ஒருவன்’ படமும் தனித்துவமான படமாக இருக்கும்,” என்கிறார் இயக்குனர் ராஜா.
Comments
Post a Comment