சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!!!

1st of July 2015
சென்னை:சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக வலம் வருபவர், இவர் நடிப்பில் கடைசியாக வந்த காக்கிசட்டை ரசிகர்களிடையே கலவையான விமர்சங்களை சந்தித்தது.

இதனால், தன் அடுத்த படத்தில் காமெடியை கொஞ்சம் தூக்கலாக்கி ரஜினி முருகனாக களம் கண்டு ரிலிஸுக்கு ரெடியாகி விட்டார்.
 
இந்நிலையில் இவர் அடுத்து என்ன படம் நடிப்பார் என அனைவரும் எதிர்ப்பார்த்த நிலையில், இன்று ட்விட்டரில் படக்குழுவின் விவரம் வெளியிடப்பட்டது.

புதுமுக இயக்குநர் பாக்யராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தைப் பற்றி சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் அட்லீயிடம் இணை இயக்குநராக பணியாற்றிய பாக்யராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அப்படத்தைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியானவண்ணம் இருந்தன. ஆனால் படக்குழு சார்பில் எதையுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கமால இருந்தார்கள்.

இந்நிலையில், ள்ண்ஸ்ஹள்ய்ங்ஷ்ற் என்ற ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டது. அதில் ஜூலை 1ம் தேதி காலை 9 மணிக்கு படத்தின் தயாரிப்பாளர் யார் என்றும், 11 மணிக்கு படக்குழுவினர் பற்றிய தகவல்களையும் வெளியிட இருப்பதாக அறிவித்தார்கள்.

அதன்படி முதலில் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பரான ராஜா, 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி இப்படத்தை தயாரிக்க இருப்பதாக முதலில் அறிவித்தார்கள்.

தொடர்ந்து இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர் அனிருத், ஒலி வடிவமைப்புக்கு ஆஸ்கர் வென்ற ரெஸுல் பூக்குட்டி, சிறப்பு மேக்கப்புக்கு 'ஐ' திரைப்படத்தில் பணியாற்றிய 'வீடா' (ரங்ற்ஹ) நிறுவனத்தைச் சேர்ந்த ஷான் ஃபுட், கலை இயக்குநராக முத்துராஜ், படத்தொகுப்புக்கு ஆண்டனி ரூபன், சண்டைப் பயிற்சியாளராக அனல் அரசு, ஆடை வடிவமைப்பாளராக அனு பார்த்தசாரதி என படக்குழுவைச் சேர்ந்த மற்றவர்களும் ஒவ்வொருவராக அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

Comments