தமிழ் தெரியாத நடிகைகளுடன் நடிப்பது கஷ்டம்: விக்ரம் பிரபு!!!

29th of July 2015
சென்னை:விக்ரம் பிரபு-கீர்த்தி நடிக்கும் படம் ‘இது என்ன மாயம்’. விஜய் இயக்குகிறார். இதுபற்றி விக்ரம் பிரபு கூறியது:காதல் ஜோடி சந்தர்ப்பவசத்தால் பிரிகிறது. பிரிந்து சென்ற பழைய காதலியை பல வருடங்களுக்கு பிறகு காதலன் சந்திக்கிறான். இவர்கள் மீண்டும் இணைய முடிகிறதா என்பதுதான் கதை. இதில் நடித்தது புதிய அனுபவம். இயக்குனர் விஜய்க்கு நான் மீட்டர் இயக்குனர் என்றே பெயர் வைத்துவிட்டேன். அந்தளவுக்கு என்னிடம் வேலை வாங்கினார்.

நீங்கள் நடிக்கவே கூடாது. எதுவுமே மீட்டருக்குள் கச்சிதமாக இருக்க வேண்டும். மீட்டருக்கு மேலயும் போகக்கூடாது, கீழேயும் போகக்கூடாது என்று கண்டிஷன் போட்டுவிட்டார். மேஜிக் பிரமேஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.ஹீரோயின் கீர்த்திக்கு நன்கு தமிழ் பேச தெரியும். அதனால் இருவரும் புரிந்துகொண்டு நடிக்க முடிந்தது. ஏற்கனவே எனக்கு ஜோடியாக நடித்த லட்சுமிமேனன், பிரியா ஆனந்த், திவ்யா போன்றவர்களும் தமிழ் தெரிந்தவர்கள்.
 
இவன் வேற மாதிரி படத்தில் ஜோடியாக நடித்த சுரபிக்கு தமிழ் தெரியாது. அதனால் காட்சியில் நடிக்கும்போது அவர் இலகுவாக இல்லாமல் இறுக்கமாகிவிடுவார். இதனால் எதிர்பார்த்ததுபோல் காட்சியை வெளிக் காட்டுவது சிரமமாகிவிடும். இதனால் தமிழ் தெரியாத நடிகைகளுடன் நடிப்பது கஷ்டம். இவ்வாறு விக்ரம் பிரபு கூறினார்.

Comments