நாளை முதல் சுரபியின் ‘புகழ்’ பரவப்போகிறது!!!

22nd of July 2015
சென்னை:இவன் வேற மாதிரி, வேலையில்லா பட்டதாரி படங்களின் ஹோம்லி லுக்கில் ரசிகர்களை கவர்ந்தவர் சுரபி. இப்போது ‘புகழ்’ படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் சுரபி. மணிமாறன் இயக்கியுள்ள இந்தப்படத்தின் டிரைலர் நாளை வெளிவருகிறது.

இந்தப்படத்தில் இவரது கேரக்டரின் பெயர் புவனா. நான் நிஜ வாழ்வில் இருப்பது போன்று மனதில் உள்ளதை உள்ளபடி எதையும் மறைக்காமல் கூறும் ஸ்ட்ரெய்ட் பார்வேடு கேரக்டராம். தனக்கு வி.ஐ.பி.யில் வாய்ப்பு கொடுத்த வேல்ராஜ் தான் இதில் ஒளிப்பதிவாளர் என்பதில் சுரபிக்கு கூடுதல் மகிழ்ச்சி.
 
இயக்குனர் மணிமாறன் சுவராசியமான காட்சிகளை பதட்டமில்லாமல் படமாக்க கூடியவர் என்றும் இவரது இயக்கத்தில் நடித்ததுதான் தனக்கு, ராம்கோபால் வர்மாவின்’ ‘அட்டாக்’ படத்தில் நடிப்பதற்கு ஒரு பயிற்சியாக இருந்தது என்றும் கூறியுள்ளார் சுரபி. ‘அட்டாக்’ படத்தில் ஒரு பைக் மெக்கானிக் ரோலில் நடிக்கிறார் சுரபி..

Comments