29th of July 2015
சென்னை:தமிழில் கேடி, நண்பன் என்று விரல்விட்டு எண்ணும் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து வந்தார் இலியானா. முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்திருந்தவருக்கு திடீரென இந்தி படங்களில் நடிக்க ஆசை வந்தது. இனி தெலுங்கு உள்ளிட்ட எந்த தென்னிந்திய படமும் வேண்டாம் என்று உதறிவிட்டு இந்தி படத்தில் நடிக்கச் சென்றதுடன்

தனது இருப்பிடத்தையும் மும்பைக்கு மாற்றிக்கொண்டார். ஐதராபாத்தில் அவர் வாங்கி வைத்திருந்த சொத்துக்களையும் விற்க முன்வந்தார்.இப்போது எதிர்பார்த்தபடி அவருக்கு இந்தியில் வாய்ப்புகள் வராததால் விரக்தி அடைந்தார். ஒன்றிரண்டு விளம்பர படங்களில் நடித்ததுடன் மற்றவர்களின் கவனத்தை கவரும் வகையில் கிளுகிளுப்பான பேட்டி, கவர்ச்சி போஸ் என பல்வேறு டெக்னிக் பயன்படுத்தினார். எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. தற்போது மீண்டும் தெலுங்கு பக்கம் தனது கவனத்ைத திருப்பி இருக்கிறார். அகினேனி அகில்
நடிக்கும் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட ஓ.கே. சொல்லி இருக்கிறார். வினாயக் இயக்கும் இப்படத்திற்காக படப்பிடிப்பு விரைவில் நடக்க உள்ளது. இலியானா பாடல் காட்சிக்காக புதிதாக செட் அமைக்கும் பணியும் தொடங்கி உள்ளதாம்.
Comments
Post a Comment