நயன்தாராவுடன் நடிக்க ஆசைப்படுகிறேன்: த்ரிஷா பேட்டி!!!

28th of July 2015
சென்னை:தனி ஒருவன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு. தெரு நாய்கள் முதல் நயன்தாராவரை த்ரிஷாவிடம் கேட்கவும், அவருக்கு சொல்லவும் நிறைய இருக்கிறது.

எந்த எந்த விஷயம் குறித்தும் தயங்காமல் வருகிறது அவரது பதில்.
 
கேரளாவில் தெருநாய்களை கொல்வது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? மோகன்லால் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளாரே?
 
தெரு நாய்களை கொல்ல சொல்வது ஈவு-இரக்கமற்ற செயல். அவைகளை பாதுகாப்பான இடத்தில் கொண்டு போய் விட்டுவிடலாம். கொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சென்னை செனடாப் சாலையில் உள்ள என் வீட்டு அருகில் கூட 10 தெரு நாய்கள் அலைகின்றன. அவைகளை பாதுகாப்பாக இடத்தில் கொண்டு போய் விடுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். 

வருண் மணியனுடான திருமணம் நின்றதற்கான காரணத்தை நீங்கள்இதுவரை கூறாதது ஏன்?
 
அது முடிந்த போன கதை. அதை மீண்டும் கிளறவேண்டாம். அதற்கு விளக்கம் சொல்ல நான் விரும்பவில்லை. அதில் குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் காரணத்தை வெளியே சொல்ல விரும்பவில்லை. 
 
திருமணத்தின் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறதா?
 
கண்டிப்பாக நம்பிக்கை இருக்கிறது. எனக்குப் பொருத்தமான ஆள் கிடைத்தால் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன்.

Comments