24th of July 2015
சென்னை:ஒரு திரைப்படத்தை ரசிகர்கள், சமூக ஆர்வலர்கள், விமர்சர்கள் என்ற கோணங்களில் முதலில் பார்ப்பது தணிக்கை குழு அதிகாரிகள் தான். அவர்களிடம் பாராட்டுப் பெற்றுவிட்டால் அந்த படம் பெரிய ஹிட்.
சென்னை:ஒரு திரைப்படத்தை ரசிகர்கள், சமூக ஆர்வலர்கள், விமர்சர்கள் என்ற கோணங்களில் முதலில் பார்ப்பது தணிக்கை குழு அதிகாரிகள் தான். அவர்களிடம் பாராட்டுப் பெற்றுவிட்டால் அந்த படம் பெரிய ஹிட்.
அப்படி ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது 'குரங்கு கைல பூ மாலை'. முழுக்க
முழுக்க புதுமுகங்கள் நடித்த இப்படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள்
படத்தை வெகுவாக பாராட்டியதுடன், படம் குறித்து
பல திரையுலக பிரபலங்களிடம் பாராட்டி பேசியுள்ளார்கள். அதில் ஒருவர் தான் தயாரிப்பாளர் தாணு.
கடந்த 20 ஆண்டுகளாக சவுண்ட் இன்ஜினியராக சினிமாவில் பணிபாற்றியுள்ள
ஜி.கிருஷ்ணன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
இவர் ஏற்கனவே 'விகடகவி' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் தான்
அமலா பால் நடிகையாக அறிமுகமானார் என்பது கூடுதல் செய்தி.
இப்படத்தில் ஜகதீஷ், கவுதம் கிருஷ்ணா ஆகியோர் ஹீரோவாக நடிக்க, 'கோலி சோடா' படத்தில் நடித்த சாந்தினி ஹீரோயினாக நடிக்கிறார்.
சாய்மீரா புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.அமீர்ஜான் தயாரிக்கும் இப்படம்,
தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் எப்படி உள்ளார்கள். அவர்களுடைய காதல்
எப்படி உள்ளது என்பதை விவரிக்கும் படமாக உள்ளது.
படம் குறித்து இயக்குனர் ஜி.கிருஷ்ணன் கூறுகையில், "தான் உயிராக நினைத்த
காதலி தன்னை ஏமாற்றியதால், மனம் போன போக்கில் வாழும் ஒருவன், தன வலையில்
சிக்கும் எல்லாப் பெண்களையும் காதலிப்பது போல் நடித்து தன ஆசைக்கு
பயன்படுத்திக் கொள்கிறான். மற்றொருவன் ஒரே பெண்ணை தீவிரமாக காதலித்து
அவளையே திருமணம் செய்ய நினைக்கிறான். முறைமாமன் ஒருவன் தன முறை பெண்ணை
திருமணம் செய்தே தீருவேன் என்று அடாவடி பண்ணுகிறான். இன்னொருவன் தனக்கு
திருமணமே வேண்டாம், ஆனால் தன்னோட டைம் பாஸுக்கு தினமும் ஒரு புதிய பெண்
வேண்டும், என்று தேடி அலைகிறான்.
இந்த நான்கு பேர்களிடம் பல இடங்களில் சிக்கி ஹ்டவிக்கும் ஒரே
கதாபாத்திரம் கதையின் நாயகி. இப்படி இவன்களிடம் சிக்கி தவிக்கும் இந்த
பெண்ணின் நிலை என்ன? இதுபோல விதவிதமான மனநிலை கொண்ட இவன்களின் நிலை என்ன?
என்பது தான் இப்படத்தின் கதை." என்று தெரிவித்தார்.
இப்படத்தின் முதல் பாதியில் இளைஞர்களுக்கு பிடித்த வகையில், படம்
ஜாலியாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் அவர்களுக்கு சிறிய அட்வைஸ்
ஒன்றையும் இயக்குனர் சொல்லியிருக்கிறாராம். இந்த அட்வைஸ் மூலம் இப்படம்
பெரியவர்களுக்கும் பிடிக்கும் என்று என்ற இயக்குனர், இப்படத்தின்
க்ளைமாக்ஸ் காட்சி ரொம்ப வித்தியாசமாக அமைக்கபப்ட்டிருப்பதாக தெரிவித்தார்.
அதாவது, படத்தின் ஆரம்பம் முதல் வரும் சிறு சிறு கதாபாத்த்ரிஅங்க்கள்
கூட, இறுதியில் க்ளைமாக்ஸ் காட்சியின் இடம்பெறுவார்களாம். அப்படி ஒரு சுழலை
திரைக்கதையில் உருவாக்கியுள்ளாரம் இயக்குனர்.
இப்படத்தை சமீபத்தில் தணிக்கை குழுவினருக்கு போட்டு கட்ட, படம் பார்த்த
அவர்கள், முதல் பாகத்தைப் பார்த்து படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்க முடிவு
செய்தார்களாம். அதன் பிறகு இரண்டாம் பாகத்தைப் பார்த்த அவர்கள், இந்த
படத்தை நாங்கள் தவறாக நினைத்து விட்டோம். இந்த காலத்து இளைஞர்களுக்கு ரொம்ப
தேவையான ஒரு விஷயத்தை சொல்லியிருக்கும் இப்படத்திற்குள் யு சான்றிதழ்
தருகிறோம் என்று தெரிவித்தார்களாம்.
மேலும், படம் குறித்து தயாரிப்பாளர் தாணுவிடம் அவர்கள் சொல்ல, அவர்
தயாரிப்பாளரை அணுகி படத்தை பார்க்க விரும்பினாராம். பிறகு படத்தை பார்த்த
தாணு, இந்த படத்தை தானே வெளியிடுவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆனால், தயாரிப்பாளர் தரப்பு தாங்கள் சொந்தமாகவே வெளியிட முடிவு
செய்துள்ளோம், என்று கூறி மறுத்துவிட்டார்களாம். இருப்பினும் படத்தின்
வெளியீட்டு உதவிகளை செய்வதாக தாணு தெரிவித்துள்ளாராம்.
இப்படி பலரை பாராட்டும்படி செய்துள்ள இந்த 'குரங்கு கைல பூ மாலை' படத்தை
வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்கள்.
மாயன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாய் சுரேஷ் படத்தொகுப்பு
செய்துள்ளார். சாய் குருநாத் இசையமைக்க, பாலு நாராயணன், மோகனராஜன்,
கு.ஐயாத்துரை, என்.இதையா ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளார்கள்.
Comments
Post a Comment