22nd of July 2015
சென்னை:ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படம் பற்றி இதுவரை இயக்குநர் ரஞ்சித் எதுவும் கூறாத நிலையில் ஒரு விருது வழங்கும் விழாவில் அவர் படத்தைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் பேசியுள்ளார்.
விழாவில் ரஞ்சித் கூறியதாவது:
நான் இயக்கிய மெட்ராஸ் படம் ரஜினி சாருக்கு மிகவும் பிடித்தது. பல கதாபாத்திரங்கள் யதார்த்தமாக இருந்ததாக சொன்னார். அதேபோல நாம் இணையும் படத்திலும் இருக்கவேண்டும் என்றார். முள்ளும் மலரும் காளியை திரையில் கொண்டுவர முயற்சி செய்வேன் என்றார்.
இந்தப் படத்தில் நடிக்க பிரகாஷ் ராஜ், கலையரசன் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளார்கள். கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தேவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் தொடங்கவிருக்கும் இந்தப் படத்தை தாணு தயாரிக்கிறார்.
Comments
Post a Comment