20th of July 2015
சென்னை:தமிழ் படங்களிலிருந்து ஒதுங்கி கன்னட படங்களில் மட்டும் நடித்து வந்த குத்து ரம்யா அரசியலில் குதித்தபிறகு கன்னட படங்களிலும் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். தேர்தல் தோல்வி, கட்சியினர் ஒத்துழைப்பு இல்லாதது, சீனியர் நடிகர்களுடன் கருத்துவேறுபாடு என வருத்தத்தில் இருந்தார்.
தவிர வெளிநாட்டு பாய்பிரண்டுடன் நெருக்கமான நட்பு கொண்டிருக்கிறார். நடிப்பா? தீவிர அரசியலா? திருமணமா? என முடிவெடுக்க முடியாமல் குழப்பத்திலும் இருந்து வந்தார் ரம்யா. இதையடுத்து அரசியல் பாடம் படிக்கச் செல்வதாக கூறிவிட்டு கடந்த ஒரு வருடமாக அவர் வெளிநாட்டில் தங்கி இருந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நடிக்க ஒப்புக்கொண்ட 4 படங்கள் கதி என்ன ஆனது என தெரியாமல் இருந்தது.
அதில் ஒருபடம் ‘தில் கா ராஜா’. திடீரென்று ஆன்லைனில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. வெளிநாட்டிலிருந்து பெங்களூர் திரும்பி இருக்கும் ரம்யாவை இப்படத்தின் புரமோஷனில் பங்கேற்க பட குழுவினர் கேட்டு வருகின்றனர். அதற்கு ஒப்புக்கொள்வதா? மறுப்பதா என்று யோசித்து வருகிறார்.
Comments
Post a Comment