21st of July 2015
சென்னை:இதுவரை டிவி நிகழ்ச்சிகளிலும் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த ரோபோ சங்கருக்கு மாரி படம் பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது.படம் முழுக்க வரும் ரோபோ சங்கர், காமெடியில் அதகளம் செய்துள்ளதால் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
முதல் நாளன்று படம் ரிலீஸான திரையரங்குகளுக்குச் சென்று பார்த்தபோதுதான் தன்னுடைய காமெடியை ரசிகர்கள் எந்தளவுக்கு ரசிக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டார். அன்று மதியமே ரோபோ சங்கரின் காமெடி குறித்து சமூகவலைத்தளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்தார்கள். இதனால் திக்குமுக்காடிப் போயிருக்கிறார் ரோபோ.
இதற்கு முன்பு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா, வாயை மூடிப் பேசவும் போன்ற படங்களில் நடித்துள்ளார். மாரி படத்தில்தான் அவருக்கு முக்கிய வேடம் அளிக்கப்பட்டுள்ளது.
படம், முதல் நாளன்று ரூ. 6 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாலும் படத்தைப் பார்த்த குடும்பத்தினர் ரோபோ சங்கரின் காமெடி பற்றி குறிப்பிட்டுச் சொன்னதாலும், ரோபோ சங்கரை மகிழ்விக்கும் விதமாக சென்னையிலுள்ள தாஜ் ஓட்டலுக்கு அழைத்துச் சென்று விருந்து அளித்துள்ளார் தனுஷ். இனி தொடர்ந்து படங்கள் பண்ணுவோம் என்று ரோபோ சங்கரை உற்சாகப்படுத்தியுள்ளார்.
ரோபோ சங்கர், அடுத்ததாக விஜய்யின் புலி படத்தில் நடித்துள்ளார்.
Comments
Post a Comment