2nd of July 2015
சென்னை:சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி ட்ரைலர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வந்தது. இப்படம் இம்மாதம் ஜூலை 17 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். அதே தேதியில் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படமும் வெளிவருகிறது
.
.
இதனால் மாரி ரிலீஸ் ஆகுமா? ஆகாதா என்ற சந்தேகம் ரசிகர்களிடைய எழுந்தது. தற்போது வந்த தகவலின் படி மாரி படம் இப்போட்டியிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. திடிரென்று கடைசி நேரத்தில் ஏன் மாரி தள்ளி போகிறது என்று விசாரித்தால் படத்தில் இன்னும் சில காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டியிருப்பதால் தான் இந்த தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் .
Comments
Post a Comment