உறுமீன். இந்தப் படத்தில் நடித்த பாபி சிம்ஹா - ரேஷ்மி காதல் ஜோடிக்கு ஜனவரியில் திருமணம்!!!???

19th of July 2015
சென்னை:பாபி சிம்ஹா நடிப்பில் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியுள்ள படம் உறுமீன். இந்தப் படத்தில் நடித்த பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் ஆகிய இருவரும் வருகிற ஜனவரி மாதம் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உறுமீன் படப்பிடிப்பின்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பெற்றோர் சம்மதம் கிடைக்காததால் விரைவில் திருப்பதியில் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்கள் என்று சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. இதை உடனடியாக மறுத்தார் சிம்ஹா.
இந்நிலையில் பாபி சிம்ஹாவின் தரப்பில் விசாரித்தபோது, ‘முதலில் இந்தக் காதலுக்கு ரேஷ்மி வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை. ஆனால் இருவரும் காதலில் உறுதியாக உள்ளதால் மனம் மாறி சம்மதம் தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து, வரும் ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. அடுத்த வருட ஜனவரியில் திருமணம்’ என்று தகவல் தெரிவித்தார்கள்.

Comments