பாடல் மட்டுமின்றி இன்று விஷால் ரசிகர்களுக்கு மேலும் ஒரு விருந்து!!!

16th of July 2015
சென்னை:விஷால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் பாயும் புலி. இப்படத்திற்கு பாண்டியநாடு படத்திற்கு இசையமைத்து சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த டி. இமான் அவர்களே இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ‘சிலுக்கு மரமே’ என்ற ஒரு பாடல் மட்டும் இன்று மாலை 6 மணியளவில் ரிலிஸாவதாக முன்பே கூறப்பட்டது.
 
அதேபோல் சமீபத்தில் வந்த தகவலின்படி மேலும் இப்பாடலின் மேக்கிங் வீடியோ ஒன்று வரவுள்ளதாம். இப்படக்குழு 7 மணியளவில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கவுள்ளது.  

Comments