16th of July 2015
சென்னை:ராஜமௌலி இயக்கத்தில் உருவான ‘பாகுபலி’ திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதில் பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா, ராணா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் இப்படம் திரைக்கு வந்துள்ளது. ரூ.250 கோடி பொருட்செலவில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தை பார்த்த பிரம்மாண்ட இயக்குனர் சங்கர், படத்தை புகழ்ந்து ராஜமௌலிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
என்ன ஒரு காவிய சிந்தனைகள், கற்பனை கவிதை, வலுவான கதாபாத்திரங்கள், சூப்பரான ஹீரோயிசம், வியக்க வைக்கும் விஷூவல். ராஜமௌலிக்கும் அவருடைய அணிக்கும் எனது வாழ்த்துக்கள்’ என சங்கர் கூறியுள்ளார்.
Comments
Post a Comment