அப்புகுட்டியை தொடர்ந்து ஸ்ருதிக்கு போட்டோ ஷூட் நடத்திய அஜித்!!!

13th of July 2015
சென்னை:புகைப்படத்துறையில் ஆர்வமுள்ள நடிகர் அஜித், சமீபத்தில் நடிகர் அப்புகுட்டியை வைத்து போட்டோஷுட் ஒன்றி நடத்தினார். இதில் அவர் அப்புகுட்டியை விதவிதாக படம் பிடித்தார். இந்த புகைபப்டங்க்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.

இந்த நிலையில், தற்போது நடிகை ஸ்ருதி ஹாசனை வைத்தும் ஒரு போட்டோ ஷூட்டை அஜித் நடத்தியுள்ளார்.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வருகிறார். இதில் நாயகியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இப்படத்தின் பாடல் காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது. அப்போது அஜித், தனது கேமரா மூலம் ஸ்ருதி ஹாசனை வெவ்வெறு கோணங்களில் படம் பிடித்தார். தற்போது இந்த புகைப்படங்களும் வெளியாகி இணையதளங்களில் பரவி வருகிறது.

Comments