ஒரு காட்சி விஜய்க்காக தான் ஒப்புக் கொண்டேன்: சுனைனா!!!

11th of July 2015
சென்னை:புலி படத்திற்கு பிறகு விஜய் அட்லீ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, தற்போது வசன காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரு நாயகிகன் நடித்துவர, மூன்றாவதாக சுனையாக இப்படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

விஜய் பெண் பார்க்கப்போகிற மாதிரி ஒரு காட்சி படத்தில் வருகிறதாம். அந்தக்காட்சியில் பெண்ணாக சுனைனா நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
 
இதற்காக ஒரு நாள் மட்டுமே அவர் நடிக்க போகிறாராம். மிகச்சிறிய வேடம் என்றாலும் விஜய் படத்தில் நடிக்கிறோம் என்பதால் சந்தோசமாக நடிக்க ஒப்புக்கொண்டாராம் சுனைனா.

Comments