ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஆக்சன் த்ரில்லர்!!!

19th of July 2015
சென்னை:த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்தை முடித்து ரிலீஸுக்கு தயாராக்கிவிட்ட ஜி.வி.பிரகாஷ், அடுத்ததாக ‘திருடன் போலீஸ்’’ படத்தை தயாரித்த கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஏற்கனவே ‘உள்குத்து’ மற்றும் ‘ஒரு நாள் கூத்து’ ஆகிய படங்களை தயாரிப்பில் வைத்திருக்கும் கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கும் நான்காவது படம் இது.

இந்தப்படத்திற்கு இன்னும் டைட்டில் முடிவாகவில்லை. ஆக்சன், த்ரில்லர் அதேசமயம் காமெடியும் கலந்து உருவாகும் இந்தப்படத்தில் பாலசரவணன், ‘முண்டாசுப்பட்டி’ ராம்தாஸ் (முனீஷ்காந்த்) ஆகியோர் நடிக்கிறார்கள். இயக்குனர் பாண்டிராஜின் சிஷ்யரான பிரசாந்த் பாண்டிராஜ் என்பவர் இந்தப்படத்தை இயக்கவுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

Comments