விஜய்க்கு வில்லனா? நோ சொன்ன பாரதிராஜா!!!

22nd of July 2015
சென்னை:இந்தப் படம் விஜயகாந்த் நடித்த சத்ரியன் படத்தை அடிப்படையாகக் கொண்டு தயாராகிறது. சத்ரியனில் திலகன் நடித்த வில்லன் வேடத்தில் நடிக்க அட்லி முதலில் அணுகியது பாரதிராஜாவை. இது குறித்த தகவலை முன்பே நாம் வெளியிட்டிருந்தோம். விஜய்க்கு வில்லனா? முடியாது என்று மறுத்துவிட்டார் பாரதிராஜா.

கமல் நடிக்கக் கேட்டும் முடியாது என்று மறுத்தவர், மணிரத்னத்தின் நட்புக்காக ஆய்தஎழுத்து படத்தில் வில்லனாக நடித்தார். பாண்டிய நாடு படத்தில் வித்தியாசமான வேடம், அதனால் நடித்தார். அதற்காக விஜய்க்கு எல்லாம் வில்லனாக நடிக்க முடியாது என அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

அந்த வேடத்தில்தான் தற்போது இயக்குனர் மகேந்திரன் நடித்து வருகிறார்.

Comments