தயாரிப்பாளரான நடிகை அமலா பால்!!! Amala Paul Vijay turns producer with Priyadarshan's film!!!

16th of July 2015
சென்னை:Tags : Think Big Studios Production No 3 Pooja Stills, Think Big Studios Production No 3 Pooja Images, Think Big Studios Production No 3 Pooja Photos, Think Big Studios Production No 3 Pooja Gallery.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த அமலா பால், இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வரும் அவர், தற்போது திரைபப்ட தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

























































தனது கணவர் இயக்குனர் விஜயின் 'திங் பிக் ஸ்டுடியோஸ்' நிறுவனம் மூலம் அமலா பால் தயாரிக்கும் இப்படத்தை ப்ரியதர்ஷன் இயக்குகிறார். இவர் தான் இயக்குனர் விஜய்க்கு குருநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். சாபு சிறில் புரொடக்ஷன் டிசைனராக பணியாற்றுகிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் துவக்க விழா, பூஜையுடன் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துக்கொண்டார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகாஷ் மாதம் துவங்குகிறது.
படம் தயாரிப்பது அமலா பால் கூறுகையில், "நான் தயாரிக்கும் முதல் படமே சர்வதேச ரசிகர்களுக்கான படமாய் தயாரகவுள்ளது. ப்ரியதர்ஷன் சார்   சந்தோஷ் சிவன் சார், பிரகாஷ் ராஜ் சார், ஸ்ரேயா ரெட்டி என தரமான கலைஞர்கள் இருப்பது இப்படத்திற்கு பெரிய பலம். ஆகஸ்ட் மாதம் மத்தியில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம். எங்கள் Think Big Studios தயாரிப்பு நிறுவனதிற்கு இப்படம் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத்தரும்" என்று தெரிவித்தார்.

Comments