நடிகர் சங்கத்தில் 60 கோடி ரூபாய் ஊழல்: எஸ்.வி.சேகர் புகார்!!!

1st of July 2015
சென்னை:நடிகர் சங்கம் பிரச்சனை என்று தான் தீருமோ தெரியவில்லை, நாளுக்கு நாள் இந்த பிரச்சனை வலுவாகி கொண்டே தான் போகின்றது.

இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளரிடம் பேசிய எஸ்.வி.சேகர் 'நடிகர் சங்க கட்டிடத்தை வாடகைக்கு விட்டதன் மூலமாக 60 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் போலி உறுப்பினர்களை அதிகமாக சங்கத்தில் சேர்த்துள்ளனர்.

எந்த ஒரு முடிவு என்றாலும் சரத்குமாரும், ராதா ரவியும் சேர்ந்து முடிவுகளை எடுத்துள்ளனர்.
சங்கத்தில் 9 பேர் நிர்வாக குழுவில் இருக்கின்றனர் என்பதை அவர்கள் நினைத்துகூட பார்ப்பதில்லை' என ஆவேசமாக கூறியுள்ளார்.

Comments