அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா,நடித்து வரும் 59' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது!!!

26th of July 2015
சென்னை:அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு ஈசிஆர் சாலையில் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படப்பிடிப்பில் விஜய், சமந்தா மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டிருந்த நிலையில், முதல்கட்ட படப்பிடிப்பில் தனது பகுதியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்றும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக காத்திருப்பதாகவும் இந்த படத்தின் நாயகி சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமந்தா பகுதியின் படப்பிடிப்பு முடிவடைந்தபோதிலும், விஜய்யின் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஈசிஆர் சாலையில் சண்டைக்காட்சிகள் மற்றும் சேஸிங் காட்சிகளின் படப்பிடிப்பு வரும் நாட்களில் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் விஜய் மற்றும் எமிஜாக்சன் சம்பந்தப்பட்ட அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என கூறப்படுகிறது.
 
விஜய், சமந்தா, எமி ஜாக்சன், ராதிகா சரத்குமார், கே.எஸ்.ரவிகுமார், 'நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் பிரபல இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடித்து வரும் இந்த படத்தில் நடிகை சுனைனா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.

Comments