சமீபத்தில் சிறிய பட்ஜெட்டில் உருவாகி: 50-ஐ தாண்டிய காக்கா முட்டை!!!

24th of July 2015
சென்னை:சமீபத்தில் சிறிய பட்ஜெட்டில் உருவாகி, பெரிய அளவில் வசூலை குவித்த படம் மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’. ரிலீசாவதற்கு முன்னதாகவே பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகள் குவித்ததோடு, நல்ல வசூலும் தந்த ‘காக்கா முட்டை’ படம்

கோலிவுட்டினரை மட்டுமல்லாமல் ரசிக்ரகளையும் சிந்திக்க வைத்த படமாகும்! சென்ற மாதம் (ஜூன்) 5-ஆம் தேதி வெளியான இப்படம் இன்று 50 ஆவது நாளை தொட்டு, இன்னமும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு படத்தின் வெற்றிக்கு மாபெரும் கலைஞர்கள் தேவையில்லை என்று அப்பட்டமாக நிரூபித்துள்ள ‘காக்கா முட்டை’ படம் 100 நாட்கள் ஓடவேண்டும்! அப்படி ஓடினால் அதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை

Comments