மனிஷா யாதவை 36 முறை முத்தமிட்ட ஜீ.வி.பிரகாஷ்!!!

4th of July 2015
சென்னை:ஜீ.வி.பிரகாஷ், மனிஷா யாதவ், ஆனந்தி ஆகியோர் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் நடித்து வருகின்றனர்.
ஆதிக் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் ஒரு முத்தக் காட்சிக்கு ஜீ.வி.பிரகாஷ் 36 டேக்குகள் வாங்கியதாக ஆதிக் கூறினார்.

நாயகனாக நடிப்பவர்கள் முத்தக் காட்சியில் நடிக்க கூச்சப்பட்டார்கள், 30 -க்கு மேல் டேக் வாங்கினார்கள், நாயகி அவரை உற்சாகப்படுத்திய பிறகே முத்தமிட்டார் என்றெல்லாம் அவ்வப்போது செய்திகள் வரும்.

முத்தக் காட்சியில் நடிக்கையில் மயங்கி விழுந்தார் என்றுகூட செய்தி வந்திருக்கிறது. நடிப்புக்காக ஒரு பெண்ணை முத்தமிட ஏன் இவர்களுக்கு இவ்வளவு தயக்கம்? புராணங்களில் வரும், பிற ஆணை நிமிர்ந்து பார்க்காத பெண்களுக்குப் பிறகு இவ்வளவு அச்சம் மடம் நாணம் கொண்டவர்கள் நமது ஹீரோக்களாகதான் இருப்பார்கள்.

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் ஒரு முத்தக் காட்சி இடம்பெறுகிறது. ஜீ.வி.பிரகாஷ் மனிஷா யாதவை முத்தமிட வேண்டும்.

தயக்கம் காரணமாக ஜீ.வி.பிரகாஷ் 36 டேக் வாங்கியதாக கூறினார் இயக்குனர் ஆதிக். அத்தனைமுறையும் சலிக்காமல் உதட்டை காட்டியிருக்கிறார் மனிஷா யாதவ்.
 
சினிமாவில் கூச்சம் நாயகனுக்குதான், நாயகிக்கு இல்லை போலும்

Comments