3 நாட்களில் ரூ.25 கோடியை வசூலித்த 'பாபநாசம்!!!

8th of July 2015
சென்னை:கமல்ஹாசன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'பாபநாசம்' படம் மாபெரும் வெற்றிப் பெற்றுள்ளது. மலையாளத்தில் வெளியான 'த்ரிஷியம்' படத்தின் ரீம்க்கான இப்படம், மலையாளப் படத்தைக் கட்டிலும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

பாபநாசம் ரிலீசான முதல் 3 நாட்களில் ரூ.25 கோடி வசூலித்துள்ளது. 3 நாட்களில் இவ்வளவு தொகையை சமீபத்தில் வந்த எந்த படமும் வசூலிக்கவில்லை. 
அமெரிக்காவில் ஜூலை 2ஆம் தேதி வெளியான  பாபநாசம், அங்கு இதுவரை ரூ.1.72 கோடி வசூலித்துள்ளது. பாபநாசம் வசூல் நிலைமை இதே போன்று நீடித்தால் மொத்த வசூல் ரூ.100 கோடியை எட்டும் என்கின்றனர்.

Comments