பாகுபலி சாதனை - 3 நாட்களில் ரூ.160 கோடி வசூல்!!!

13th of July 2015
சென்னை:பாகுபலி படம் கடந்த மூன்று தினங்களில் வசூல் செய்த தொகை எவ்வளவு என்ற அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான ‘பாகுபலி’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த வெள்ளியன்று ரிலீசானது. தமிழகம் முழுவதும் 500 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது.
 
உலகம் முழுவதும் 4000 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசானது. முதல் நாளிலேயே ரூ. 76 கோடி வரை வசூலித்து இந்த படம் சாதனை படைத்தது. இரண்டு நாட்களில் வசூல் ரூ.115 கோடியை எட்டியது மூன்று நாட்களில் ரூ. 160 கோடி வசூலித்துள்ளது. இதற்கு முன்பு வெளிவந்த ‘பி.கே.’ ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘தசாவதாரம்’, ‘விஸ்வரூபம்’, ‘ரா ஒன்’ உள்ளிட்ட படங்கள் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி உள்ளன. ஆனால் இரண்டே நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலித்த இந்திய படம் ‘பாகுபலி’தான். பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் போன்றோர் இதில் நடித்துள்ளனர்.
 
ராஜமவுலி இயக்கியுள்ளார். இந்த சாதனை இயக்குநர் ராஜமவுலியால் மட்டுமே சாத்தியமானது என்றால் மிகையல்ல. இந்தப் படத்தைப் பொருத்தவரை ராஜமவுலிக்காக மட்டுமே இவ்வளவு கோடிகள் செலவழிக்கப்பட்டது. அப்படி செலவழித்த தொகையை மிகச் சரியாகப் பயன்படுத்தி ஒரு காவியத்தை திரையில் படைத்திருக்கிறார் ராஜமவுலி. மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள் அவருக்குத் தந்த அபார ஒத்துழைப்பு, இந்த சாதனையைச் சாத்தியமாக்கியுள்ளது.

Comments