2வது ஹீரோயின் என்றால் கால்ஷீட் கிடையாது: அப்செட் ஆன பிரணிதா கண்டிப்பு!!!

29th of July 2015
சென்னை:தமிழில் ‘சகுனி’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தவர்  பிரணிதா. தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு அடுத்தடுத்து 2வது ஹீரோயின் வேடங்களே கிடைப்பதால் வருத்தம் அடைந்துள்ளார். ‘அத்தரன்டிக்கி தரெடி’ தெலுங்கு படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிக்க 2வது ஹீரோயினாக பிரணிதா நடித்தார். இதையடுத்தே அவருக்கு அதேபோல் கதாபாத்திரங்கள் தரப்படுகிறது.

சமீபத்தில் என்.டி.பாலகிருஷ்ணா நடிக்கும் 99வது படத்தில் நடிக்க பிரணிதாவுக்கு அழைப்பு வந்தது. பிரபல ஹீரோவுடன் ஜோடி சேர வாய்ப்பு வந்ததால் குஷி அடைந்தார். ஆனால் அடுத்த நிமிடமே படத்தில் அஞ்சலிதான் ஹீரோயின் தனக்கு 2வது ஹீரோயின் வேடம்தான் என்று தெரிந்ததும் அப்செட் ஆனார்.

 இனி 2வது ஹீரோயினாக நடிக்க முடியாது என்றபடி அவர் படத்திலிருந்து வெளியேறிவிட்டார். இதுபற்றி பிரணிதா தரப்பில் கேட்டபோது கோபத்தை அடக்கிக்கொண்டு வழக்கம்போல்,’கால்ஷீட் பிரச்னையால் நடிக்கவில்லை’ என்று பதில் தரப்பட்டது. இனிமேல் 2வது ஹீரோயின் என்றால் கால்ஷீட் கிடையாது என்று அவர் திட்டவட்டமாக கூறுகிறாராம்.

Comments