21st of July 2015
சென்னை:பாட்ஷா 2 படத்தில் அஜீத் நடிக்கிறார் என்று செய்தி வந்ததிலிருந்து அஜீத் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள். இப்போது இது குறித்து இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பதிலளித்துள்ளார்.
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, பாட்ஷா 2 படத்துக்கான திரைக்கதையைத் தயார் செய்துவிட்டதாகவும் கதை கேட்ட அஜீத் உடனே நடிக்க ஒப்புக்கொண்டார் என்றும் பலவிதமான கோணங்களில் செய்திகள் வெளிவந்தன.
ரஜினி அந்தக் கதையில் நடிக்க மறுப்பு தெரிவித்ததாலேயே அஜீத் நடிக்கிறார் என்பது போன்ற பாட்ஷா 2 பற்றிய செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.
பாட்ஷா 2 பற்றிய செய்தியில் உண்மையில்லை. ஆனால் அந்தச் செய்தி உண்மையானால் சந்தோஷம்தான். அஜீத்தை வைத்து இயக்க யார் மறுப்பு தெரிவிப்பார்கள் என்று அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அஜீத் இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துவருகிறார். இதற்கடுத்து கே.வி. ஆனந்த் படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன. அதையும் இரு தரப்பினரும் மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment