30th of July 2015
சென்னை:ஓ காதல் கண்மணி படம் மூலமாக அதிகப் புகழ் பெற்ற நடிகை நித்யா மேனன், சூர்யா அடுத்து நடித்து வரும் ‘24’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சென்னை:ஓ காதல் கண்மணி படம் மூலமாக அதிகப் புகழ் பெற்ற நடிகை நித்யா மேனன், சூர்யா அடுத்து நடித்து வரும் ‘24’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
24 படத்தில் சூர்யாவின் ஜோடி சமந்தா என்று முதலில் சொல்லப்பட்டது. அதேசமயம் நித்யா மேனனுக்கும் முக்கியமான கதாபாத்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அவர் இப்போது மும்பையில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் என்று படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளார்கள்.
விக்ரம் குமார் இயக்கும் இந்தப் படத்தில் சூர்யா, இரட்டை வேடத்தில் நடிக்கிறார். எனவே சூர்யாவின் இன்னொரு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கப்படுகிறது.
Comments
Post a Comment