ஆகஸ்ட் 14ல் சுதந்திர காற்றை சுவாசிக்குமா வாலு..?!!!

27th of July 2015
சென்னை:இப்படியே பிரச்சனை மேல் பிரச்சனை வந்தால் ‘வாலு’ படத்தை எப்ப(டி)த்தான் ரிலீஸ் செய்வது என சிம்புவும் அவரது தந்தை டி.ஆரும் கலங்கி நிற்க, கோர்ட்டில் வழக்கை விசாரித்த நீதிபதி உங்களுக்குள்ளேயே சமரசமாக பேசி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரலாமே என இரு தரப்பினருக்கும் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து கடன் வாங்கியவர்களிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி சில, பல லடங்களை கொடுத்தும், போதும் போதாதற்கு இனிவரும் காலங்களில்,தனது படத்தின் மூலம் சரிசெய்வதாக உத்தரவாதத்தை வழங்கியும் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்துள்லார்கள் தந்தை மகன் இருவரும். இதையடுத்து ‘வாலு’ திரைப்படம் வரும் ஆகஸ்ட்-14-ஆம் தேதியே சுதந்திர காற்றை சுவாசிக்கும் என தெரிகிறது.

Comments